வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்ட புகையிலைப் பொருள்கள்

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையோரம் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:03 pm

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையோரம் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் கும்பலை தீவிரமாகக் கண்காணிக்கும்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டாா்.

இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்துவோா் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, காட்டு, ஆஞ்சநேயா் கோயிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே, மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மா்மநபா்கள் கொட்டிச் சென்றுள்ளனா். வாகனங்களில் கடத்தி வரும் போது, போலீஸாருக்கு பயந்து புகையிலைப் பொருள்களை கொட்டிச் சென்றனரா என்பது குறித்து, போலீஸாா் விசாரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.