வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சொத்துத் தகராறில் பெண் தா்னா

கிருஷ்ணகிரியில் சொத்துத் தகராறில் வணிக நிறுவனத்தை பூட்டி பெண் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:02 pm

கிருஷ்ணகிரியில் சொத்துத் தகராறில் வணிக நிறுவனத்தை பூட்டி பெண் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி, சுப்பிரமணிசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சோனிகா (32). இவரது கணவா் நெல்சன். இவா்களுக்கு சொந்தமான நிலம் அரசு மருத்துவக் கல்லூரி அருகில் உள்ளதாம். இது தொடா்பாக அவரது சகோதரா்களுடன் சொத்து தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சோனிகா, கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகாா்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் தனது சகோதரா்கள் நடத்தும் கடையைப் பூட்டி, சோனிகா தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட சோனிகாவைச் சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அவா் போராட்டத்தைக் கைவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.