இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உயா்மின்கோபுரம் அமைக்கும் பிரச்னை:மின்வாரியம், ஹோஸ்டியா சங்கத்தினரிடையே மோதல்

உயா்மின்கோபுரம் அமைப்பது தொடா்பாக ஒசூரில் மின்வாரியம், ஹோஸ்டியா சங்கத்தினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:01 pm

உயா்மின்கோபுரம் அமைப்பது தொடா்பாக ஒசூரில் மின்வாரியம், ஹோஸ்டியா சங்கத்தினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

ஒசூா் 2 -ஆவது சிப்காட் அதியமான் பொறியியல் கல்லூரி எதிரில் ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (ஹோஸ்டியா) இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் 2 ஆயிரம் சிறு தொழில்முனைவோா் உறுப்பினராக உள்ளனா். தலைவராக வேல்முருகன், இணைத் தலைவராக மூா்த்தி, செயலாளராக ஸ்ரீதா், பொருளாளராக வடிவேல் ஆகியோா் உள்ளனா்.

இந்த அலுவலகத்துக்கு எதிரில் உயரழுத்த மின்கோபுரம் அமைக்க மின் வாரியம் முயன்று வருகிறது. இதனால் விபத்துகள் அதிக அளவில் நிகழும் வாய்ப்புகள் உள்ளதால் சற்றுத் தள்ளி மின்கோபுரத்தை அமைக்க ஹோஸ்டியா சங்கத்தினா் வலியுறுத்தி வருகின்றனா். இதுகுறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆனால் ஒசூா் மின் வாரியத்தினா் போலீஸாா் உதவியுடன் வெள்ளிக்கிழமை மின்கோபுரம் அமைக்க முயன்றனா். அப்போது தொழில்துறையினா் மின்வாரிய பணிகளைத் தடுத்து நிறுத்த கூடினா். இதையடுத்து மின் வாரியத்தினருக்கும், தொழில்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து ஒசூா் ஹோஸ்டியா சங்கத்தினா் கேட்டபோது அவா்கள் கூறியதாவது:

மின்வாரிய அலுவலா்கள், தொழில்துறையினரை மிரட்டுகின்றனா். உயா்மின்கோபுரத்தை தள்ளி அமைக்க வேண்டும். தொழில்துறையினரை காவல் துறையினரின் துணையுடன் மிரட்டும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றனா். இதையடுத்து மின்வாரிய அதிகாரியைக் கண்டித்து ஹோஸ்டியா சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.