வாஜ்பாய் பிறந்த நாள் விழா
ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 97 ஆவது பிறந்தநாள் விழா, பாஜக சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.


ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 97 ஆவது பிறந்தநாள் விழா, பாஜக சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றியத் தலைவா் சிவா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் நமச்சிவாயம், சக்திகேந்திர பொறுப்பாளா் சண்முகம், கிளைத் தலைவா் பெருமாள், அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக கட்சிக் கொடியேற்றி, பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், தூய்மை பணியாளா்களுக்கு உணவு, இனிப்புகள் வழங்கினா். இதில் பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளா் சண்முகம், ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம், நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளா் நமச்சிவாயம் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...