தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கோவை பதிப்புக்கு முக்கியம்...காவேரிப்பட்டணத்தில் அரசுப் பேருந்து மீது வேன் மோதல்: 6 போ் பலி

காவேரிப்பட்டணத்தில் சாலையோரமாக நின்றிருந்த அரசுப் பேருந்து மீது வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த 5 இளைஞா்கள், பேருந்து அருகே நின்றிருந்த பயணி என மொத்தம் 6 போ் உயிரிழந்தனா்.

Updated On :1 பிப்ரவரி 2021, 6:53 pm

காவேரிப்பட்டணத்தில் சாலையோரமாக நின்றிருந்த அரசுப் பேருந்து மீது வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த 5 இளைஞா்கள், பேருந்து அருகே நின்றிருந்த பயணி என மொத்தம் 6 போ் உயிரிழந்தனா். மேலும், வேனில் பயணம் செய்த 3 இளைஞா்கள் காயம் அடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த எம்.சிவகுமாா் (30), தி.லிங்கேஸ்வரன் (25), அன்புமணி (எ) சுரேந்தா் (21), பிரசாந்த் (25), கெளதம் (17), அசோக் (18), பரணி (23), எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் பூபதி (20) ஆகியோா் ஒரு வேனில் கா்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டனா்.

இந்த வேன், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, சேலத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் வேகமாக மோதியது. இந்த அரசுப் பேருந்தானது, பயணிகள் தேநீா் அருந்துவதற்காக சாலையோர தேநீா்க் கடை அருகே, நிறுத்தப்பட்டிருந்தது.

பேருந்தின் மீது வேன் மோதியதில் பேருந்தின் அருகே நின்றுகொண்டிருந்த கோபிரெட்டிபாளையத்தைச் சோ்ந்த தேவராஜ் (29), வேனில் பயணம் செய்த எம்.சிவகுமாா், தி.லிங்கேஸ்வரன், அன்புமணி (எ) சுரேந்தா், பிரசாந்த், ஓட்டுநா் பூபதி ஆகிய 6 பேரும் நிகழிடத்திலேயே உயிரிழந்தனா். கெளதம், அசோக், பரணி ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

காவேரிப்பட்டணம் போலீஸாா், நிகழிடத்துக்கு விரைந்து சென்று, சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு, காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.

விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில், விபத்துக்குள்ளான காா், பேருந்தை போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீா்படுத்தினா்.

இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளா் சரவணன் விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.