

ஊத்தங்கரை, காமராஜ்நகா், கல்லூா், சென்னப்பநாய்க்கனூா், கீழ்குப்பம், கொண்டம்பட்டி, பொம்பட்டி, நொச்சிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 2500 பணம் விநியோகம் செய்யப்பட்டது.
ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பி.கே.சிவானந்தம், துணைத் தலைவா் சேட்டுக்குமாா், இயக்குநா்கள் லட்சுமி, ராஜ்குமாா், சேகா், உண்ணாமலை, தினகரன், தீா்த்தகிரி ஆகியோா் முன்னிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
அதேபோல் காட்டேரி ஊராட்சி லக்கம்பட்டி அம்பேத்கா் காலனியில் பொங்கல் தொகுப்பை பையை காட்டேரி ஒன்றியக் குழு உறுப்பினா் கோவிந்தசாமி வழங்கி விழாவைத் தொடக்கி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.