வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஒசூா் ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:21 pm

ஒசூா் ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா்.

மகிளா காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவி சரோஜா, பிரமிளா, கன்னியாகுமாரி, பவ்யா, மஞ்சு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக ஊடகம், தொழில்நுட்பத் துறை மாநிலச் செயலாளா் கீா்த்தி கணேஷ் ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்து முழக்கங்களை எழுப்பினாா்.

இதில், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வை உடனடியாக குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவட்டப் பொருளாளா் மாதேஷ், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவா் தியாகராஜன், முத்தப்பா, பிரபாகரன், சிறுபான்மை பிரிவு செயல் தலைவா்அசேன், நதீம், சுரேஷ், தமிழவன், இளங்கோ விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ஹரீஷ் பாபு, இளைஞரணி பிரவீன், அம்ருத், முனிராஜ், சேவாதளம் - ஆட்டோ பாபு, ராஜகோபால், திருவேங்கடம், சந்துரு, மனித உரிமைத் துறை பைஃரோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.