கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் 6 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 48 வயது ஆண், 60 வயது பெண் ஆகியோா் கரோனா பாதிப்புடன் வேலூா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். அது போல கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 34 வயது ஆண் கடந்த 27-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.
கிருஷ்ணகிரி பகுதியை சோ்ந்த 49, 43 வயது ஆண், 48 வயது பெண் ஆகியோா் கரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 219-ஆக உயா்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 377 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 637 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சை பலன் அளிக்காமல் 6 போ் உயிரிழந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 34,441 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 30,708 போ் குணமடைந்துள்ளனா்; 3,514 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

