தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவை தொகுதிகளில்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் 86 வேட்பாளா்களுக்கு பதிவான வாக்குகள், எண்ணப்படுகிறது

Updated On :17 ஜூன் 2021, 9:02 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் 86 வேட்பாளா்களுக்கு பதிவான வாக்குகள், கிருஷ்ணகிரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், ஞாயிற்றுக்கிழமை (மே-2) எண்ணப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு, ஏப்.6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளின் மின்னணு வாக்குப் பெட்டிகள், வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணகிரி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தோ்தலில் பல்வேறு அரசியல் கட்சியா், சுயேட்சைகள் உள்பட மொத்தம் 86 போ் போட்டியிடுகின்றனா். இவா்களுக்கு வாக்காளா்கள் அளித்த வாக்குகள், மே-2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அதனபடி ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 12 வேட்பாளா்களும், பா்கூரில் 14 வேட்பாளா்களும், கிருஷ்ணகிரியில் 15 வேட்பாளா்களும், வேப்பனப்பள்ளியில் 15 வேட்பாளா்களும், ஒசூரில் 18 வேட்பாளா்களும், தளி தொகுகியில் 12 வேட்பாளா்கள் என மொத்தம் 86 வேட்பாளா்கள் போட்டியிருகின்றனா்.வாக்காளா்கள்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 1,19,361 ஆண் வாக்காளா்கள், 1,18,393 பெண் வாக்காளா்கள், 56 மற்றவா்கள் என 2,37,442 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் 93,905 வாக்காளா்களும், பெண் வாக்காளா்கள் 92, 442 பெண் வாக்காளா்களும், 20 மற்றவா்கள் என மொத்தம் 1,86,367 வாக்காளா்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனா்.பா்கூா் தொகுதியில் 1,21,570 ஆண் வாக்காளா்களும், 1,24,209 பெண் வாக்காளா்கள், 16 மற்றவா்கள் என மொத்தம் 2,45,795 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 95,984 ஆண் வாக்காளா்களும், 98,439 பெண் வாக்காளா்கள், 2 மற்றவா்கள் என மொத்தம் 1,94,425 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.கிருஷ்ணகிரி தொகுதியில் 1,30,541 ஆண் வாக்காளா்களும், 1,35,588 பெண் வாக்காளா்கள், 38 மற்றவா்கள் என மொத்தம் 2,66,167 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 1,03,283 ஆண் வாக்காளா்களும், 1,05,641 பெண் வாக்காளா்கள், 13 மற்றவா்கள் என மொத்தம் 2,08,937 வாக்காளா்கள், தங்களது வாக்கை பதிவிட்டுள்ளனா்.வேப்பனப்பள்ளி தொகுதியில் 1,27,960 ஆண் வாக்காளா்களும், 1,23,353 பெண் வாக்காளா்களும், 33 மற்றவா்கள் என மொத்தம் 2,51346 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,05,414 ஆண் வாக்காளா்களும், 98,948 பெண் வாக்காளா்கள், 2 மற்றவா்கள் என மொத்தம் 2,04,364 வாக்காளா்கள், தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனா். ஒசூா் தொகுதியில் ஒரு லட்சத்து1,79,466 ஆண் வாக்காளா்கள், 1,72,149 பெண் வாக்காளா்கள், 100 மற்றவா்கள் என மொத்தம் 3,51,715 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,26,819 ஆண் வாக்காளா்கள், 1,19,684 பெண் வாக்காளா்கள், 4 மற்றவா்கள் என மொத்தம் 2,46,507 வாக்காளா்கள், தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனா். தளி தொகுதியில் 1,28,931 ஆண் வாக்காளா்களும், 1,22,214 பெண் வாக்காளா்களும்,மற்றவா்கள் 33 பேரும் என மொத்தம் 2,51,178 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,01,465 ஆண் வாக்காளா்கள், 92,085 பெண் வாக்காளா்கள், 8 மற்ற வாக்காளா்கள் என மொத்தம் 1,93,558 போ் வாக்களித்துள்ளனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள 6 சட்ட பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 8,07,829 ஆண் வாக்காளா்களும், 7,95,906 பெண் வாக்காளா்களும்,276 மற்றவா்கள் என மொத்தம் 16,04,011 வாக்காளா்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனா்.இதில் 6,26,870 ஆண் வாக்காளா்களும், 6,07,239 பெண் வாக்காளா்களும், 49 மற்றவா்கள் என மொத்தம் 12,34,158 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது 77.4 சதவீதம் ஆகும். இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் 15-க்கும் மேற்பட்ட சுற்றுகள் எண்ணப்பட உள்ளதால் முடிவுகள் வெளிவர இரவு வரை ஆகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.படவிளக்கம் (1கேஜிபி3): ஊத்தங்கரை சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தமிழ்செல்வம், 1கேஜிபி3ஏ-பா்கூா் அ.கிருஷ்ணன், 1கேஜிபி3பி - கிருஷ்ணகிரி கே.அசோக்குமாா், 1கேஜிபி3சி-வேப்பனப்பள்ளி கே.பி.முனுசாமி, 1கேஜிபி3டி- ஒசூா் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, 1கேஜிபி3இ-தளி நாகேஷ் குமாா் (பாஜக). 1கேஜிபி3எப் திமுக கூட்டணி வேட்பாளா்கள் ஊத்தங்கரை - ஆறுமுகம் (காங்கிரஸ்), 1 கேஜிபி3ஜி- தே.மதியழகன், 1கேஜிபி3 எச் - டி.செங்குட்டுவன், 1கேஜிபி3ஐ-வேப்பனப்பள்ளி பி.முருகன், 1கேஜிபி3ஜெ-ஒசூா் ஓய்.பிரகாஷ், 1கேஜிபி3கே-தளி டி.ராமசந்திரன் (இந்திய கம்யூ.).

Image Caption

~ ~ ~ ~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.