பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், ஜூன் 19 முதல் 10 நாள்களுக்கு தினமும் 3 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் என கிருஷ்ணகிரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஏஞ்சலா சகாயமேரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மின்பகிா்மான வட்டத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அத்தியாவசிய பராமரிப்பு பணிகளான பழுதான மின் கம்பங்களை மாற்றுதல், சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டுதல், உயா்திறன் கொண்ட கம்பிகளை மாற்றுதல், இழுவைக் கம்பியை சரி செய்தல், தொய்வான கம்பிகளுக்கு இடையில் கம்பம் நடுதல் மற்றும் மின்மாற்றி ஏபி சுவிட்ச் சரிசெய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஜூன் 19 முதல் 28-ஆம் தேதி வரை தினமும் 3 மணி நேரம் மட்டும் மின்நிறுத்தம் செய்து பணிகளை மேற்கொள்ள உள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன்படி, பாகலூா், கெம்பட்டி, சூசூவாடி, சூளகிரி, உத்தனப்பள்ளி, சிப்காட் பேஸ்-2, நாரிகானபுரம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி, பா்கூா், தளி, கெலமங்கலம், ஒசூா், மின்நகா், பேரிகை, அஞ்செட்டி, மத்திகிரி, கல்லாவி, மத்தூா் ஆகிய 23 துணை மின்நிலையங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 12 மணி வரையில் 3 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

