கழிவறை கட்டித் தர கணவன் மறுத்ததால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பட்டகப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகிளா (26) என்பவருக்கும், தொப்பிடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த முத்தரசன் (31) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளாா்.
திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்த முத்தரசன், கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பால் வேலையிழந்து ஒரு மாதத்துக்கு முன் தன் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளாா்.
இந்த நிலையில், வீட்டில் கழிவறை கட்டித் தருமாறு மகிளா, கணவனிடம் வலியுறுத்தியுள்ளாா். ஆனால், முத்தரசன் கழிவறையைக் கட்டித் தரவில்லையாம். இதனால் மனமுடைந்த மகிளா, புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மகிளாவின் தாய் பாரதி அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆனதால், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் கற்பகவள்ளி விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

