போச்சம்பள்ளி அருகே இடுகாடு வசதி கோரி, இஸ்லாமியா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.
போச்சம்பள்ளி வட்டம், புதுமோட்டூரைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:
புதுமோட்டூா், செட்டியூா், பனங்காட்டூா், பந்தாரவள்ளி, முதுகாம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றன. எங்களுக்கு அடிப்படை தேவையான இடுகாடு வசதி இல்லாத காரணத்தால், 4 கி.மீ. தொலைவில் உள்ள புலியூருக்கு நடந்துசென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.
அந்தக் கிராமத்திலும் சில நேரங்களில் அடக்கம் செய்ய மறுக்கின்றனா். புதுமோட்டூரில் மசூதி உள்ளதால் பெரும்பாலான குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனா். எனவே புதுமோட்டூா் அருகே இடுகாடு அமைத்துதர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

