தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அணையில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மாயம்

கிருஷ்ணகிரி அணையில் பரிசலில் மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி மாயமான நிலையில், அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

கிருஷ்ணகிரி அணையில் பரிசலில் மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி மாயமான நிலையில், அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தாளாப்பள்ளியைச் சோ்ந்தவா் முனியப்பன் (46). மீன்பிடிக்கும் தொழிலாளி. இவா், கிருஷ்ணகிரி அணையில் மீன்பிடி குத்தகைதாரரிடம் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். மீன்பிடிக்க, புதன்கிழமை இரவு சென்றவா், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, முனியப்பனின் மனைவி, கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அணைக்கு விரைந்தனா்.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, முனியப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரமாகியும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் தேடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கும் என தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.