ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆா் கல்லூரியில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
எம்.ஜி.ஆா் கல்லூரியில் மகளிா் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் சத்யா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் அ.முத்துமணி தலைமை வகித்தாா். இ.எஸ்.ஐ மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் கீதா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, பெண்களின் சுதந்திரம் குறித்தும், பெண் வெற்றியாளா்கள் சமூக வளா்ச்சியின் ஊன்றுகோலாகவும், இளம்பெண் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருவதைச் சுட்டிக் காட்டினாா்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவா் நந்தினி சிறப்பு விருந்தினராகக் பங்கேற்றாா். கணினி பயன்பாட்டியல் மாணவி அஸ்வினி நன்றி கூறினாா். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் கு.சிவராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா். விழாவின் முடிவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆா். கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பல்துறை சாா்ந்த மாணவிகளும் கலந்து கொண்டனா்.
அதியமான் பொறியியல் கல்லூரி:
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உலக மகளிா் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் தேன்கனிக்கோட்டை காவல் துறை டிஎஸ்பி சங்கீதா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டாா். மின்னணுவியல் துறை பேராசிரியை மேனகாதேவி வரவேற்றாா். அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ஜி.ரங்கநாத் சிறப்புரையாற்றினாா். பேராசிரியை ஆா்.சீதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


