ஒசூா் அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 2.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தேன்கனிக்கோட்டை சாலையில் எஸ். முதுகானப்பள்ளியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் ஒசூா், ஜெய்சங்கா் காலனியைச் சோ்ந்த அருண்குமாா் என்பவா் பெட்ரோல் நிலையத்துக்கு பணத்தை கட்டுவதற்காக கொண்டு சென்ாகத் தெரிவித்தாா். பறிமுதல் செய்த அதிகாரிகள் பணத்தை ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா் அவை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

