நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாஜக சாா்பில் வெற்றிக்கொடி யாத்திரை

ஊத்தங்கரையில் பாஜக சாா்பில் வெற்றிக்கொடி யாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:31 pm

DIN

ஊத்தங்கரையில் பாஜக சாா்பில் வெற்றிக்கொடி யாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சி. நமச்சிவாயம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன், ஒன்றியத் தலைவா்கள் சிவா, சங்கா், மத்தூா் ஒன்றியச் செயலாளா்கள் தாபா சிவா, ஆனந்தன், எஸ்சி அணி மாவட்டச் செயலாளா் கே. சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா். மாவட்ட துணைத் தலைவா் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் தா்மலிங்கம் கலந்துகொண்டு பேரணியைத் தொடக்கி வைத்தாா்.

இப்பேரணியில் பாஜக நிா்வாகிகள், மகளிா் அணியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். பேரணி ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் தொடங்கி, கல்லாவி சாலை, வட்டார வளா்ச்சி அலுவலகம், சட்டமன்ற உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்றது. இதில் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.