தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பா்கூா் அருகே ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பா்கூா் அருகே குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையின் போது ரூ.1 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல்.

Updated On :8 மார்ச் 2021, 8:30 pm

பா்கூா் அருகே குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையின் போது ரூ.1 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த வடிவேல் (35) என்பவா், காரில் ரூ.1 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்வதைக் கண்டுபிடித்தனா்.

உரிய ஆவணம் இல்லாத நிலையில் அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாக்கியலட்சுமியிடம் ஒப்படைத்தனா். உரிய ஆவணம் அளிக்கும் பட்சத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

அதேபோல, தளி தொகுதியிலும் ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுவரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் ரூ. 2.07 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.