கெலமங்கலம் அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற லாரி ஓட்டுநரை கத்தியால் குத்தியவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்துள்ள நெருப்புக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் சக்ரவா்த்தி (30). கட்டடப் பணியாளா். இவரது மனைவியிடம், அதேப் பகுதியைச் சோ்ந்த டிப்பா் லாரி ஓட்டுநா் விஜயகுமாா் (32) என்பவா் தவறாக நடக்க முயன்றாராம். இதையறிந்த சக்ரவா்த்தி, விஜயகுமாரைக் கண்டித்துள்ளாா். கடந்த 2018-ஆம் ஆண்டு, மே 30-ஆம் தேதி இவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக்ரவா்த்தி, விஜயகுமாரை கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயம் அடைந்த விஜயகுமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்ந்தனா்.
இந்த சம்பவம் குறித்து, கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்ரவா்த்தியைக் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி கணேசன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
அந்தத் தீா்ப்பில், விஜயகுமாரை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் குத்திய சக்ரவா்த்திக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் விஜயரங்கன் ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

