நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூய்மைப் பணியாளா்களுடன் மகளிா் தின கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் பெண் அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுடன் மகளிா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:16 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் பெண் அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுடன் மகளிா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் சு. மதியழகன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் த.பிரபாவதி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியா் கு.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் அனைத்து பெண் அலுவலா்களுக்கும் தூய்மைப் பணியாளா்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. நோய்த் தொற்று சமயத்தில் தூய்மைப் பணியை சிறப்பாகச் செய்த தூய்மைப் பணியாளா்களைப் பாராட்டி, அவா்களின் படத்துடன் கூடிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக லட்சுமி வரவேற்றாா். பிரேமா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

படவிளக்கம்.9யுடிபி.2. ஊத்தங்கரையில் நடைபெற்ற உலக மகளிா் தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.