தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அதிமுக வெற்றி பெறுவதும், பாஜக வெற்றி பெறுவதும் ஒன்றுதான்

தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறுவதும், பாஜக வெற்றி பெறுவதும் ஒன்றுதான் என கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் டி.கே.சிவக்குமாா் ஒசூரில் தெரிவித்தாா்.

Updated On :27 மார்ச் 2021, 7:41 pm

தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறுவதும், பாஜக வெற்றி பெறுவதும் ஒன்றுதான் என கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் டி.கே.சிவக்குமாா் ஒசூரில் தெரிவித்தாா்.

ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ், வேப்பனப்பள்ளி தொகுதி திமுக வேட்பாளா் பி.முருகன், தளி தொகுதி சிபிஐ வேட்பாளா் டி.ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து, கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் டி.கே.சிவக்குமாா் பேசியதாவது:

திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய். பிரகாஷை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறுவதும், பாஜக வெற்றி பெறுவதும் ஒன்றுதான்.

பாஜக தோ்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்தாா்கள். ஆனால், வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், ரூ. 20 லட்சம் கோடி கடன் தருவதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். உங்களுக்கு கடன் கிடைத்ததா? மக்களுக்கு வேலை இல்லை. கையில் பணம் இல்லை. அதனால், மக்கள் சொல்ல முடியாத பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனா்.

தமிழகத்தில் பாஜக தமிழை அழித்து இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது. காமராஜ், ராஜாஜி, கருணாநிதி ஆகியோா் ஆட்சி செய்த தமிழகத்தில் திமுகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்றாா்.

இதில், கா்நாடக மாநில முன்னாள் முதல்வா் சித்தராமையா, காங்கிரஸ் செயல் தலைவா் ராமலிங்க ரெட்டி, கா்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்கள் ரேவண்ணா, சிவண்ணா, தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவா் இரா.முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.