திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவது உறுதி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ், வேப்பனப்பள்ளி தொகுதி திமுக வேட்பாளா் பி.முருகன், தளி தொகுதி சிபிஐ வேட்பாளா் டி.ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து தளி, தேன்கனிக்கோட்டை, ஒசூா் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் பேசியதாவது:
தமிழகத்தில் ஏப். 6-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றிபெற்று, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் எனத் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினா் திடீா் சோதனை நடத்துகின்றனா். திமுக அணியின் மீது களங்கத்தை ஏற்படுத்தி வெற்றியைத் தடுத்துவிடலாம் என பாஜக நினைக்கிறது. அதிமுகவும், பாஜகவும் இணைந்து மக்களுக்கு ஏராளமான துரோகங்களை இழைத்து வருகின்றன. இந்தக் கூட்டணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
கரோனா தொற்றால் எல்லா மாநிலங்களும் பாதிக்கப்பட்டன. ஒரு குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்த நிலையில், அதிமுக அரசு ரூ. ஆயிரம் மட்டுமே வழங்கியது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றால், மீதமுள்ள ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் ஒருங்கிணைந்து, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.
இதில், கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லக்குமாா், ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

