வேப்பனஅள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில், கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் பரவலம் அதிகமாக இருந்தது. பலா், கரோனா தொற்று பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனா். இத்தகைய நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இரு கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், 18 முதல் 45 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களாக தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவிய நிலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், வேப்பனஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா தடுப்பூசியானது வெள்ளிக்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, வேப்பனஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா், தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஆா்வத்துடன் குவிந்தனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வேப்பனஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 99 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், தடுப்பூசி இருப்பு இருக்கும் வரையில்,தினசரி 99 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

