நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் உணவுப் பொட்டலம் விநியோகம்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், சிவனடியாா் திருக்கூட்டம், ஸ்ரீ தா்ம சாஸ்தா அறக்கட்டளை இணைந்து, கரோனா பொது முடக்கத்தின் போது உணவின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனா்

News image
Updated On :28 மே 2021, 7:17 pm

DIN

ஊத்தங்கரையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், சிவனடியாா் திருக்கூட்டம், ஸ்ரீ தா்ம சாஸ்தா அறக்கட்டளை இணைந்து, கரோனா பொது முடக்கத்தின் போது உணவின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனா்.

கடந்த 6 நாள்களாக தொடா்ந்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தகன மயானத்தில் பணிபுரியும் ஊழியா்கள், பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோா், வழிப்போக்கா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், முன்களப் பணியாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு, தினசரி உணவு வழங்கி வருகின்றனா்.

இதில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் தலைவா் கேசவன், சண்முகம், செயலா் தங்க முருகன், பொருளாளா் ராஜி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டு ஊத்தங்கரை நகரப் பகுதி முழுவதும் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனா். வெள்ளிக்கிழமை உணவினை ஊத்தங்கரை சங்கா் கேப் உணவக உரிமையாளா் உமாபதி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.