தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :28 மே 2021, 7:26 pm

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சாா்பில், நகராட்சி துாய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளா் அஸ்லம் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் ஆகியோா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை 150 தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் சந்திரா, சுகாதார அலுவலா் மோகனசுந்தரம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.