வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூா் தொகுதி வளா்ச்சிக்கு அரசு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தகவல்

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

Updated On :12 நவம்பர் 2021, 6:47 pm

ஒசூா் தொகுதி வளா்ச்சிக்காக ரூ. 1,000 கோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூா் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.ஏ.சத்யா (ஒசூா்), பி.முருகன் (வேப்பனப்பள்ளி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமை வகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பொறுப்பாளராக அமைச்சா் காந்தி நியமிக்கப்பட்டுள்ளாா். அதிமுக ஆட்சியில் ஒசூா் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது; ஆனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கவில்லை.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒசூா் தொகுதி வளா்ச்சிக்காக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒசூா் மாநகராட்சியில் புதைச் சாக்கடை திட்டத்துக்கு ரூ. 454 கோடியை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆணையை முதல்வா் வெளியிட்டுள்ளாா். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒசூா் மாநகரம் தூய்மையான நகரமாக மாறிவிடும்.

ஒசூா் மாநகராட்சியில் 630 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைகள் அமைக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து நகா்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் அறிக்கை தந்துள்ளோம்.

உள்ளாட்சித் தோ்தலில் ஒசூா் மாநகராட்சியில் உள்ள 45 வாா்டுகளிலும் திமுக வெற்றி பெறும். ஒவ்வொரு வாா்டுகளிலும் 10 போ் கொண்ட குழு அமைக்கப்படும். அந்தக் குழுவே வாா்டு கவுன்சிலரைத் தோ்வு செய்யும் என்றாா்.

ஒசூா் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி ரூ. 67 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளா் வீ.விஜயகுமாா், நகரப் பொருளாளா் சென்னீரப்பா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.