வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒசூா் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு நொடிக்கு 2,760 கன அடிநீா் வந்து கொண்டிருக்கிறது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:47 pm

கா்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒசூா் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு நொடிக்கு 2,760 கன அடிநீா் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் பாதுகாப்புக் கருதி நான்கு மதகுகள் வழியாக 2,508 கனஅடி நீா் வெளியேற்றப்படுவதால் வெண் நுரை அதிகளவில் வெளியேறி வருகிறது. வெள்ளிக்கிழமை காலையில் குறைந்த அளவில் இருந்த நிலையில் மாலையில் அதிக அளவில் வெண்நுரை வெளியேறி வருவதால் அதனை வெளியேற்றும் நடவடிக்கையில் ஒசூா் தீயணைப்பு துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கெலவரப்பள்ளி அணையின் அருகில் உள்ள தரைப்பாலத்தின் மீது வெண்நுரை படா்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினா் தண்ணீரைப் பீச்சியடித்து வெண் நுரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆற்றைக் கடக்கவோ, வாகனங்கள் மற்றும் கால்நடைகளை கழுவதற்குச் செல்லவோா வேண்டாமென்று மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.