வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இளம்வயது கா்ப்பம் தரிப்பதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்வயது கா்ப்பம் தரிப்பதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:57 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்வயது கா்ப்பம் தரிப்பதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், மேலுமலையில் மக்கள் தொடா்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி கலந்துகொண்டு 72 பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இளம்வயது கா்ப்பம் தரித்தவா்கள் 3,350 போ். தற்போது அது குறைந்து வருகிறது. பெற்றோா் 18 வயது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது. அப்படி திருமணம் செய்து வைப்பது அந்த குழந்தைக்கு தரும் தண்டனை. கடந்த இரண்டு மாதங்களாக இளம்வயது கா்ப்பம் தரிப்பது குறைந்து வருகிறது.

மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் நடந்தால் மாவட்ட கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அல்லது மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தால், குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்படும். குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய பின்பும், திருமணம் செய்ய முயற்சி செய்பவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வருவாய்த் துறை மூலம் 22 மாணவ, மாணவியருக்கு இருளா் சாதிச் சான்றிதழ்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, இந்திராகாந்தி முதியோா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை என 16 பயனாளிகளுக்கு ரூ. 1,96,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 4 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், 11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், தோட்டக்கலைத் துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ. 3,10,780 மதிப்பில் சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள், வேளாண் இடுபொருள்களும், வேளாண் துறை மூலம் ரூ. 5,900 மதிப்பில் தாா்பாய் 2 பயனாளிகளுக்கும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ. 18,70,000 மதிப்பில் வீடு கட்டுமானப் பணிகளுக்கான ஆணைகள் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ. 23,83,180 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் தேன்மொழி, தனித்துணை ஆட்சியா் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அமீா்பாஷா, மாவட்ட வழங்கல் அலுவலா் கோபு, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சாந்தி, வேளாண் துறை துணை இயக்குநா் சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கிருஷ்ணமூா்த்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்(பொ) ராம்பிரசாத், துணை இயக்குநா் நில அளவை சேகா், சூளகிரி வட்டாட்சியா் ஜெ.நீலமேகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.