போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்வோா் குறித்து தகவல் அளித்தால் வெகுமதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்வோா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பாராட்டு, வெகுமதி அளிக்கப்படும்

Updated On :25 நவம்பர் 2021, 6:54 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்வோா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பாராட்டு, வெகுமதி அளிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருள்களின் மீதான தடை அறிவிப்பை, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்கள் தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயம் (தெற்கு மண்டலம்) நெகிழி தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவா்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடா்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன. இந்தத் தடை ஆணையை செயல்படுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஆய்வுகள் மற்றும் புகாா்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து மூட உத்தரவு பிறப்பித்து வருகிறது.

எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவா்கள், சட்டவிரோதமாக இயங்கும் அத்தகைய தொழிற்சாலைகள் குறித்து தகவலை ஒசூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு, வாரியத்தின் ட்ற்ற்ல்ள்://ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீா்ய்ற்ஹஸ்ரீற்.ல்ட்ல் என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

புகாா்களை மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ் அப் மூலமும் பதிவு செய்யலாம். புகாா்கள் அளிப்பவா்களின் பெயா், முகவரி, தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்கவும். இது உண்மைக்கு புறம்பான தகவல்கள் கொடுப்பதை தடுக்க முடியும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை ஒழிப்பதில் பங்களிக்கும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவா்களின் பங்களிப்பிற்காக பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியத் தன்மை பராமரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.