வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரியில் அனைத்துத்துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

கிருஷ்ணகிரியில் அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் வட்டார இணைச் செயலாளா் ரங்கநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜாமந்திரி, மாவட்ட இணை செயலாளா் கலைவாணி, மின்வாரிய ஓய்வதியா் சங்கம் முனிரத்தினம், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் முனியன், அஞ்சல் துறை ஓய்வூதியா் சங்கம் விஜயராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அரசு ஓய்வூதியம், நல்ல உறைவிடம், சுகாதாரமான குடிநீா், சத்தான உணவு, சிறந்த மருத்துவம், தரமான போக்குவரத்து, இலவசப் பேருந்து மற்றும் ரயில் பயண சலுகை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தோ்தல்கால வாக்குறுதியான 70 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியா்கள் உள்ளிட்டோருக்களு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியா், காப்பீட்டுத்திட்ட குறை தீா் கூட்டமும், காலமுறை கூட்டமும் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.