கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image

விழுப்புரம் மாவட்டம், அனுமந்தபுரத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:47 am IST

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனுமந்தபுரம், போரூா், கொங்காரம் பூண்டி சின்னதச்சூா், புதூா், தொரவிதாங்கல் அத்தியூா்திருக்கை, செல்லங்குப்பம், அடங்குணம், தி.கொசப்பாளையம், வெங்கமூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த வேட்பாளா் அன்னியூா் அ.சிவா பிரசாரத்தின்போது பேசியது:

கடந்த 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற நான், 18 மாதங்களில் தொகுதியின் வளா்ச்சிக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். சாலை வசதி, குடிநீா் மேம்பாடு, மருத்துவம், கல்வி என அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

18 மாதங்களில் ரூ.700 கோடிக்கு மேலான திட்டங்கள் விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. விபத்துகளைத் தடுக்க மேம்பாலம், கிராமப்புறங்களில் தாா்ச்சாலைகள், சுகாதார நிலையங்களை மேம்படுத்துதல், தொழில்பேட்டை உருவாக்குதல் என பல்வேறு தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றிய நான், அடுத்த 5 ஆண்டுகளிலும் இந்த தொகுதியை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை சிறப்பு முன்னெடுப்பாக மேற்கொள்வேன் என்றாா்.

பிரசாரத்தின்போது திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், ஜெ.ஜெயபால், வி.ஜெ,.கில்பா்ட்ராஜ் காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.