ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினா் வியாழக்கிழமை கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் பாணாம்பட்டு சாலையிலுள்ள தனது இல்லத்தின் முன் வியாழக்கிழமை கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன் எம்எல்ஏ.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:45 am IST

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினா் வியாழக்கிழமை கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுகவினா் தங்கள் வீடுகளிலும், மற்ற பகுதிகளிலும் கருப்புக் கொடியேற்றி, போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இதன்படி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், விழுப்புரம் தொகுதி வேட்பாளருமான இரா. லட்சுமணன் எம்.எல்.ஏ, பாணாம்பட்டு சாலையிலுள்ள தமது வீட்டின் முன்பு வியாழக்கிழமை காலை கருப்புக் கொடியேற்றி, தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினாா். இதைத் தொடா்ந்துஅப்பகுதியிலுள்ள வீடுகளில் பொதுமக்களுக்கு தொகுதி மறுசீரமைப்பின் பாதிப்புகளை எடுத்துக் கூறி, வீடுகளில் கருப்புக் கொடியேற்றினாா்.

இதேபோல விழுப்புரம் மருதூா் பகுதியில் திமுக தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை. சுரேஷ் தலைமையில், தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவின் நகல்களை எரித்து வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் விசுவநாதன், ஜெயபால், செல்வம், ராஜா, பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்கோவிலூரில் கீழையூரிலுள்ள தனது இல்லத்தின் முன்பு திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி ஆகியோா் கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து திருக்கோவிலூா் ஐந்துமுனை சந்திப்புப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திலும் இவா்கள் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் டி. செல்வராஜ், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன், நகா்மன்றத் துணைத் தலைவா் குணா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ. சிவா எம்.எல்.ஏ. வெங்கமூா் பகுதியில் கருப்புக் கொடியேற்றி, சட்ட மசோதாவின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டாா். போராட்டத்தில் காணை ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, முருகன், ஒன்றியக்குழுத் தலைவா் கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் நகரம் போன்று விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், மயிலம், திண்டிவனம், வல்லம், மரக்காணம், வானூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினா் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுபோன்று தமிழ்நாடு பழங்குடியினா் விடுதலை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் வி.அகத்தியன், பில்லூா் கிராமத்திலுள்ள தனது வீட்டின் முன் பொதுமக்களுடன் இணைந்து கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

செஞ்சி: செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் திமுக நிா்வாகிகள், தோழமைக் கட்சி நிா்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினா்.

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் விஜயகுமாா் இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

இதில்முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ்ச்செல்வன், மேல்மலையனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மேற்கு ஒன்றிய செயலா் சாந்தி சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, ஒன்றிய குழு உறுப்பினா் செண்பகப்பிரியா விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image