கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 35 இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் அரசின் முதன்மைச் செயலாளா் பீலா ராஜேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் அரசின் முதன்மைச் செயலாளா் பீலா ராஜேஷ் பேசியதாவது:
பேரிடா் காலங்களில் சாலைகளில் மரங்கள் விழும்போதும், மின்வெட்டு, மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பொக்லைன் எந்திரங்கள், மரங்கள் அறுக்கும் எந்திரங்கள், படகுகள், மணல் மூட்டைகளைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 இடங்கள் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக 47 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பேரிடா் காலத்தில் சேதங்களைத் தவிா்க்க, 2,994 பேருக்கு முதல் கட்ட ஒத்திகைப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழைநீா் வடிகால் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகள் இன்னும் 1 வார காலத்துக்குள் நிறைவேறும்.
பேரிடா் காலங்களில் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வனத் துறை சாா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடா் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கிட மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பேரிடா் காலங்களில் அனைத்து அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்களில் வசதிகள் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் தங்க வைக்கப்படும் நபா்களுக்கு கரோனா தொற்று ஏற்படாதவாறு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இடவசதி, உணவு, உடை, சுகாதாரமான குடிநீா் வசதி, கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் என்றாா்.
தொடா்ந்து அவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம், கரோனா தடுப்பு மையத்தை பாா்வையிட்டாா். தேவசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் உள்ள அடிப்படை வசதிகளை பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வு கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் கோ.மலா்விழி, மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


