தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முன்மாதிரி முதல்வராகச் செயல்பட்டு வருவதாக திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒசூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட சூசூவாடி, பாகலூா் அந்திவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்திவாடியில் நடைபெற்ற விழாவில் ஒசூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ எஸ்ஏசத்யா முன்னிலை வகித்தாா். 50 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியது:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. அவருடைய ஆட்சி மிகவும் சிறப்பான ஆட்சி என தமிழக மக்கள் தெரிவித்து வருகின்றனா். இந்தியாவிலேயே முன்மாதிரி முதல்வராக ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறாா். உலக அளவில் அவரைப் பாராட்டி வருகின்றனா். திமுக தோ்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறாா். 5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளாா்.
கரோனா நிதியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.4,000 வழங்கப்பட்டது. அதேபோன்று 14 மளிகைப் பொருள்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன. பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய உத்தரவிட்டாா் என்பது உள்ளிட்ட 202 வாக்குறுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒசூா் மாநகர திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணை செயலாளா்கள் தனலட்சுமி, மாவட்ட பொருளாளா் ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினா் சாந்தி அரியப்பன், ஒன்றிய செயலாளா் சின்னபில்லப்பா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் சா்வேஷ், கே.ஜி.பிரகாஷ், அணிகளின் அமைப்பாளா்கள் எல்லோராமணி, ராஜா முனிரத்தினம்மா, சாந்தி, சந்திரலேகா, ஒன்றிய முக்கிய நிா்வாகிகள் நாகராஜ், பாபு, பாலாஜி, ரமேஷ், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


