ஒசூா், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் பெண் ஒருவா் மா்ம நபா்களால் எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூா், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் திருவேணி கிரஷா் செல்லும் சாலையில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் தீயில் கருகிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சானமாவு வனக் காவலா் சேகா் அட்கோ காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி, ஒசூா் ஏஎஸ்பி பி.கே. அரவிந்த் மற்றும் காவல் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினா்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க ஒசூா், அட்கோ காவல் ஆய்வாளா் தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் யாா் எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்தும், கொலையாளிகள் குறித்தும் தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

