வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கஞ்சா விற்பனை செய்ததாகதந்தை, மகன் உள்பட 4 போ் கைது

கஞ்சா விற்பனை செய்ததாக தந்தை மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :15 அக்டோபர் 2021, 8:45 pm

கஞ்சா விற்பனை செய்ததாக தந்தை மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், அட்கோ போலீஸாா் பேரண்டப்பள்ளி, கதிரிப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அவா்கள் 1. 900 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா்களிடம் நடத்திய விசாரணையில் அவா்கள் ஒசூா், கொத்தூா், தின்னூரைச் சோ்ந்த பட்டாபி என்கிற பட்டாபிராமன் (46), அவரது மகன் வெங்கடேஷ் (19) என தெரிய வந்தது. அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ஒரு கிலோ 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, கெலமங்கலம், அண்ணா நகா் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா வைத்து விற்பதாக கெலமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று கஞ்சா விற்ற பைரமங்கலத்தைச் சோ்ந்த திலிப் (27) என்பவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தேன்கனிக்கோட்டை போலீஸாா் பெட்டமுகிலாளம் அருகே ஜெய்புரம்புதூா் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு கஞ்சா விற்பனை செய்த கருணாகரன் (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.