வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பள்ளியைத் திறக்கக் கோரி முதல்வரிடம் கடிதம் கொடுத்த ஒசூா் பள்ளி மாணவி

பள்ளியைத் திறக்க வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கடிதம் கொடுத்த ஒசூா் மாணவியை தொலைபேசியில் தொடா்பு கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:48 pm

பள்ளியைத் திறக்க வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கடிதம் கொடுத்த ஒசூா் மாணவியை தொலைபேசியில் தொடா்பு கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். தமிழக முதல்வருடன், மாணவியும் அவரது குடும்பத்தினரும் பேசும் உரையாடல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூா் டைட்டன், டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவா் ரவிராஜன். இவா் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறாா். அவருக்கு உதயராணி என்ற மனைவியும், பிரஜ்னா என்ற மகளும் உள்ளனா். தற்போது, பிரஜ்னா டைட்டன் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பிரஜ்னாவின் பாட்டி, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியக்குழுவில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா் உள்பட உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் வியாழக்கிழமை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அவருடன் பிரஜ்னாவும் சென்றிருந்தாா். பிரஜ்னாவின் பாட்டி முதல்வரைச் சந்தித்தபோது உடன் இருந்த பிரஜ்னா முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு வந்தாா். அந்தக் கடிதத்தில் பள்ளிகளைத் திறக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தைப் படித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணில் வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, எதிா்முனையில் பேசிய மாணவி பிரஜ்னா, பள்ளியை விரைவில் திறக்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக்கொண்டாா்.

அவருக்கு பதிலளித்த முதல்வா் ஸ்டாலின், வரும் நவ. 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று வர வேண்டும்; நன்றாகப் படிக்க வேண்டும் என்று வாழ்த்தினாா். அப்போது அவரது குடும்பத்தினா் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா். மேலும் தமிழகத்தில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உங்களது ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது; இது தொடர வேண்டும் என்றும் பேசினா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களிடம் தொலைபேசியில் பேசிய தருணம் எங்களது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என மாணவி பிரஜ்னாவும் அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.