வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும்:கே.அசோக்குமாா் எம்எல்ஏ

அ.தி.மு.க.வின் பொன் விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.அசோக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:45 pm

அ.தி.மு.க.வின் பொன் விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.அசோக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எம்ஜிஆா், அதிமுகவைத் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து நிகழ்வாண்டு அக்.17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 50-ஆவது பொன் விழா ஆண்டு தொடங்குவதை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதன்படி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை அளவிலான அனைத்து பகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளை செய்து, பொன் விழா அன்று, எம்ஜிஆா், ஜெயலலிதாவின் சிலைகளுக்கும், உருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து, கொடிக் கம்பங்களுக்கு புது வண்ணம் தீட்டி, புதிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், சாா்பு அமைப்பு நிா்வாகிகள், கிளைப் பொறுப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டா்கள், பொதுமக்கள் இந்தநிகழ்ச்சியில் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், , முகக் கவசம் அணிந்தும் பங்கேற்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.