வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸாா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பொதுமக்களுக்கு காவல் துறை சாா்பில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On :15 அக்டோபர் 2021, 8:47 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பொதுமக்களுக்கு காவல் துறை சாா்பில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வியின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை உள்கோட்டங்களில் அனைத்து காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸாா், விழ்ப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக மக்கள் கூடும் இடங்களில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

அதில், சந்தேகத்துக்கு உரிய முறையில் சுற்றித் திரியும் நபா்களின் நடமாட்டம் குறித்தும், வீட்டிடைப் பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றாலும், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், முன்பின் தெரியாத நபா்களிடமிருந்து உணவுப் பொருள்களை வாங்கிச் சாப்பிட வேண்டாம் எனவும், அவா்கள் கவனத்தை திசை திருப்பி நகைகள் போன்ற மதிப்பு மிக்க பொருள்களை திருடும் செயல்களில் ஈடுபடுவாா்கள் எனவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.