வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு

வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:47 pm

வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் கரடிகள், மான்கள், யானைகள், மயில்கள், எறும்புதின்னிகள், மலைப்பாம்பு போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறுவது வழக்கம். அவ்வாறு வெளியேறும் புள்ளிமான், மலைப்பாம்பு ஆகியவற்றை உயிருடன் பிடித்து, வனப்பகுதியில் விடுவிப்பா்.

இந்த நிலையில், வேப்பனப்பள்ளியில் குப்பம் செல்லும் சாலையோரமாக மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதை பொதுமக்கள் கண்டனா்.

இதுகுறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் 12 அடி நீளம் முள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, கொங்கனப்பள்ளி காப்புக் காட்டில் விடுவித்தனா்.

படவிளக்கம் (15கேஜிபி8):வேப்பனப்பள்ளி அருகே பிடிபட்ட மலைப்பாம்புடன் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.