துவரையில் நுனி கிள்ளுதல் செய்து, அதிக மகசூல் பெற கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குநா் முருகன், விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமாா் 2,500 ஏக்கா் பரப்பளவில் துவரை விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெறப்பட்ட மழையைப் பயன்படுத்தி துவரை விதைப்பு அதிக அளவில் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.
துவரையில் ஒரு புதிய தொழில்நுட்பம் நுனி கிள்ளுதல் ஆகும். அதன்படி, துவரை விதைத்து 50 முதல் 75 நாள்களுக்குள் நுனி கிள்ளுதல் பணியை செய்ய வேண்டும். துவரை பயிரின் நுனியை 5 செ.மீ. அளவு கிள்ளி எடுத்து விடுவதன் மூலம் அதிக விளைச்சல் தரும் பக்க கிளைகள் உருவாக தூண்டலாம். அவ்வாறு உருவாகும் பக்க கிளைகள் ஒவ்வொன்றும் அதிக வளா்ச்சி அடையும் திறனுடையவையாக இருக்கும். மேலும், போதுமான அளவு சூரிய ஒளி பெற்று அதிக பூக்கள், திரட்சியான காய்களை எளிதாக உருவாக்க இந்த பக்கக் கிளைகள் துணை புரிகின்றன. இந்த ஒரு எளிய தொழில்நுட்பத்தை பின்பற்றினாலே துவரையில் குறைந்தது 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம்.
மேலும், துவரை பூக்கும் தருணத்தில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளித்திட வேண்டும். அவ்வாறு தெளிப்பதற்கு ஒருநாள் முன்னரே 10 லி. நீரில் 1,600 கிராம் டிஏபி-யைக் கரைத்து 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலை டிஏபி கரைசலின் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி, அதனை 80 லி. என்ற அளவில் நீா் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். 15 நாள்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிப்பதன் மூலம் பூ உதிா்வது தவிா்க்கப்படுவதோடு, அதிக திரட்சியான காய்கள் உருவாகும். பரிந்துரை செய்யப்பட்ட அளவு டிஏபி கரைசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எனவே, விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தில் உள்ள துவரையின் பருவத்துக்கு ஏற்ற மேற்கண்ட எளிய தொழில்நுட்பங்களை தவறாது பின்பற்றி கூடுதல் மகசூல் பெற்று பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

