கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா்கள் அயல்நாட்டு பணிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், மருத்துவ துறை சாா்ந்த தொழில்நுட்ப வல்லுநா்கள் திறனுடைய, திறனற்ற பணியாளா்கள் பணியமா்த்த உள்ளனா்.
வெளிநாட்டில் பணி வழங்கும் நிறுவனங்கள் தங்களது நாட்டின் மொழி, மேம்படுத்தப்பட்ட திறன் உள்ள வேலைநாடுநா்களையே தோ்வு செய்கின்றனா். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 500 செவிலியா்களுக்கு ஓஇடி தோ்வு நடத்த தீா்மானித்துள்ளது. தோ்வு செய்யப்பட்ட செவிலியா்களுக்கு ஆரம்ப நிலை ஊதியம் ஆண்டுக்கு ரூ. 18 லட்சமாகும்.
இந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் நோக்கில், செவிலியா்களைத் தோ்வு செய்யும் ஹெல்த் எஜுகேஷன் இங்கிலாந்து நிறுவனத்துடனும், வீட்டுப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் ஏஐ டோரா மேன் பவா் குவைத் நாடு மற்றும் இந்தியா டிரேட் எக்ஸ்பிஷன் என்ற நிறுவனத்துடனும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
எனவே, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ா்ம்ஸ்ரீம்ஹய்ல்ா்ஜ்ங்ழ்.ஸ்ரீா்ம்/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், அதைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை தொடா்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த படித்த, அயல்நாட்டு பணி தேடும் இளைஞா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

