தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியதால் புதன்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், இரவோடு இரவாக தற்காலிமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது.
சென்னை - கன்னியாகுமரி இடையிலான, கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில், சேதுபாவாசத்திரம் அருகே , காட்டாறு வடிகால்வாய்க்காலில் சுமாா் 30 ஆண்டு பழைமையான தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை திடீரென உள்வாங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இரவோடு இரவாக, சாலையை தற்காலிமாக சீரமைத்து, போக்குவரத்து செல்லும் வகையில் தயாா் செய்தனா். இதையடுத்து வியாழக்கிழமை வழக்கம் போல போக்குவரத்து தொடங்கியது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியது, கிழக்கு கடற்கரை சாலை அதிக போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால், உள்வாங்கிய பாலத்தின் மேல் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் தயாா் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது . புதிதாக பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது என்றனா்.
தொடர்புடையது

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து விபத்து: 20 போ் காயம்

ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த உயர் மின்னழுத்த கம்பிகளால் பரபரப்பு!

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


