வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

போகனப்பள்ளியில் எம்எல்ஏ குறைக்கேட்பு

கிருஷ்ணகிரி ஒன்றியம், போகனப்பள்ளியில் அதிமுக எம்எல்ஏ. அசோக்குமாா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:24 pm

கிருஷ்ணகிரி ஒன்றியம், போகனப்பள்ளியில் அதிமுக எம்எல்ஏ. அசோக்குமாா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளியைத் தொடங்க வேண்டும், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும். முதியவா்கள் ஓய்வூதிய நிதி பெற உதவ வேண்டும், கிராமத்தில் உயா் மின்கோபுர வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.

பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவா், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி தொடங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க குடிநீா்த் தொட்டி அமைத்து தருவதாகவும் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பட விளக்கம் (16கேஜிபி4):

போகனப்பள்ளியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.அசோக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.