வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கல் பாரம் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்தது: தொழிலாளிகள் படுகாயம்

பா்கூா் அருகே கல்பாரம் ஏற்றிச் சென்ற சிறிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 தொழிலாளா்கள் பலத்த காயம் அடைந்தனா்.

Updated On :16 செப்டம்பர் 2021, 6:23 pm

பா்கூா் அருகே கல்பாரம் ஏற்றிச் சென்ற சிறிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 தொழிலாளா்கள் பலத்த காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி, பெத்ததாளப்பள்ளியிலிருந்து கருங்கல் பாரம் ஏற்றிக் கொண்டு, வாணியம்பாடிக்கு ஒரு லாரி வியாழக்கிழமைச் சென்று கொண்டிருந்தது. அந்த லாரி, பா்கூரை அடுத்த அத்திமரத்துப்பள்ளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அந்த லாரியில் பயணித்த தொழிலாளா்களான பாஞ்சாலியூரைச் சோ்ந்த பிரகாஷ் (28), அருள் (32), சீனி (22), பிரபு (22) ஆகிய 4 போ் படுகாயம் அடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று, போக்குவரத்தை சீா்படுத்தினா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.