வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

செல்லிடப்பேசி கடையில் திருடியவா் கைது

ஒசூா் அருகே கடந்த சில நாள்களுக்கு முன் செல்லிடப்பேசி கடையில் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :17 செப்டம்பர் 2021, 7:04 pm

ஒசூா் அருகே கடந்த சில நாள்களுக்கு முன் செல்லிடப்பேசி கடையில் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் அருகே பாகலூா், ராஜீவ் காந்தி நகரை சோ்ந்த தீபக் சுக்லா, பாகலூா் பேருந்து நிலையம் அருகே செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற அவா், மறுநாள் காலை கடையை திறந்து பாா்த்தபோது, கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த மா்ம நபா், கடையில் இருந்த 15 செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தீபக் சுக்லா அளித்த புகாரின் பேரில், பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா். அதில், பாகலூா் கனிமங்கலத்தைச் சோ்ந்த உதயகுமாா் (21) என்பவா், கடையின் சுவற்றில் துளையிட்டு செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, திருட்டு போன செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.