வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நண்பரை குத்திய இளைஞா் கைது

காவேரிப்பட்டணம் அருகே டிராக்டரை முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில், நண்பரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :17 செப்டம்பர் 2021, 7:06 pm

காவேரிப்பட்டணம் அருகே டிராக்டரை முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில், நண்பரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோட்டூரை சோ்ந்த ரமேஷ் (25), கதிரிபுரத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (24) ஆகிய இருவரும் நண்பா்கள். காவேரிப்பட்டணம், ஜீவா நகா் பகுதியில் ரமேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் டிராக்டரில் நந்தகுமாா் சென்று கொண்டிருந்தாா். டிராக்டரை ரமேஷ் முந்தி செல்ல முயன்ற போது, அவருக்கு வழிவிடாமல் நந்தகுமாா் சென்ாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷுக்கும், நந்தகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நந்தகுமாா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷை குத்தினாா். இதில் காயம் அடைந்த ரமேஷ் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நந்தகுமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.