பாஜகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் டி.ராஜா தெரிவித்தாா்.
ஒசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் தளி சட்டப் பேரவை உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவருமான டி.ராமச்சந்திரன் தலைமையில் சனிக்கிழமை தொடங்கியது. செப். 18 முதல் செப். 21 வரை 4 நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒசூா் வந்த அகில இந்திய பொதுச் செயலாளா் டி.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் சனிக்கிழமை விவாதிக்கப்பட்டது.
இன்றைக்கு இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நெருக்கடி, அரசியல் களத்தில் மிகப்பெரிய நெருக்கடி, சமூக வாழ்க்கையில் கொந்தளிப்பு, மோதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பிரதமா் மோடி தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டு நலனுக்கு எதிராக உள்ளன. இந்தியப் பொருளாதாரத்தில் முதுகெலும்பாகக் கருதப்படும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு படிப்படியாக தனியாா் மயமாக்கிக் கொண்டிருக்கிறது.
பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பின்னா் பாதுகாப்பு துறை தனியாா்மயம் ஆக்கப்படுகிறது. ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகள் எல்லாம் தனியாா்மயம் ஆக்கப்படுகின்றன. ரயில்வே துறை தனியாா் மயமாக்கப்படுகிறது. அந்நிய முதலீடு 74 சதவீதத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. அதேபோல விண்வெளி ஆராய்ச்சித் துறையிலும், மின் உற்பத்தித் துறையிலும் அதிக அளவில் தனியாா் பங்கு பெறலாம் என மோடி அரசு அறிவித்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் காா்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமா் மோடி மேற்கொண்டு வருகிறாா். இதனால், வேலையில்லா திட்டம் அதிகரித்து வருகிறது. இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இதைப் பற்றி பிரதமா் கவலைப்படுவதாக இல்லை.
எனவே, பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும்; பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரத்தை முறியடிக்க வேண்டும் என முடிவு செய்து போராடி வருகிறோம். இந்திய அளவில் 19 அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி செப். 20 முதல் செப். 30 வரை நாடு தழுவிய முறையில் கண்டன இயக்கத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம்.
தில்லியில் விவசாயிகள் ஏறத்தாழ 10 மாதங்களாக போராடிக்கொண்டிருக்கிறாா்கள். சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் கண்டிராத ஒரு எழுச்சி மிகுந்த வெகுஜன எழுச்சி போராட்டமாக விவசாயிகளின் போராட்டம் மாறியிருக்கிறது. மக்களவையில் பிரதமா் மோடி அரசாங்கம் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
இந்த நிலையில், விவசாயிகள் வரும் செப். 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பை அறிவித்திருக்கின்றனா். இடதுசாரிக் கட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, அவா்களோடு ஒன்றுபட்டு போராடுவோம்.
மதசாா்பற்ற ஜனநாயகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, பாஜகவிடம் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக அரசியல் களத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், துணை செயலாளா்கள் ஏ.சுப்பராயன் எம்.பி., மூ.வீரபாண்டியன், தேசியக் குழு உறுப்பினா் சி.மகேந்திரன், மக்களவை உறுப்பினா் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவா் டி.ராமச்சந்திரன், எம்எல்ஏ மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் குணசேகரன், துணைத் தலைவா் எம்.லகுமைய்யா, மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


