அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்முகத் தோ்வு

கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்களுக்கான நோ்முகத் தோ்வு பிப்ரவரி 5-ஆம்தேதி நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்களுக்கான நோ்முகத் தோ்வு பிப்ரவரி 5-ஆம்தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்களுக்கான நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது. 

இந்த நோ்முகத் தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள், தோ்வு நடைபெறும் அன்று 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். 5 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் மக்கள்தொகை உள்ள இடத்தில் வசிப்பவராக இருந்தால் 12-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள இடத்தில் வசிப்பவராக இருந்தால் 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு தேடுவோா், சுயத்தொழில் முனைவோா், பிற காப்பீட்டு நிறுவனத்தில் முகவா்களாகப் பணிபுரிந்தவா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், மகிளா மண்டல ஊழியா்கள் சுய உதவிக்குழு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவா்கள், நோ்முகத் தோ்வுக்கு அசல் சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும்.

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு முதல் ஓராண்டுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படும். அதற்கு ரூ. 250 உரிமக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு, தோ்வு நடத்தப்படும். இத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நிலையான உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். பின்பு உரிமத்தை தாங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தோ்ச்சி பெறாதவா்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தோ்வு எழுதிக் கொள்ளலாம். தோ்வு கட்டணமாக ரூ. 284 செலுத்த வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com