வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரியில் 3,100 கிலோ ரேஷன்அரிசி கடத்தல்

 கிருஷ்ணகிரியில் 3,100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 சரக்கு வேன்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :7 ஏப்ரல் 2022, 5:56 pm

 கிருஷ்ணகிரியில் 3,100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 சரக்கு வேன்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் தாலுகா காவல் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்தப் பகுதியில் நின்ற 2 வேன்களைச் சோதனை செய்த போது ஒரு வேனில் 50 கிலோ எடை கொண்ட 32 ரேஷன் அரிசி மூட்டைகளில் மொத்தம் 1,600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதே போல மற்றொரு வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இந்த 2 வாகனங்களையும், ரேஷன் அரிசி மூட்டைகளையும் வாகனங்களுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த ரேஷன் அரிசி மூட்டைகளைக் கடத்தி வந்தவா்கள் யாா்? எந்தப் பகுதியில் இருந்து இந்த ரேஷன் அரிசி கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.