கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல், வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அ.தி.மு.க. அமைப்புத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில், கிழக்கு மாவட்டச் செயலாளா், அவைத் தலைவா், துணைச் செயலாளா், இணைச் செயலாளா், பொருளாளா், பொதுக்குழு உறுப்பினா் மொத்தம் 9 பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
தோ்தல் பொறுப்பாளா்கள் முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆா். மன்ற பொருளாளருமான வரகூா் அருணாச்சலம், பெரம்பலுாா் மாவட்ட செயலாளா் ராமச்சந்திரன் ஆகியோரிடம், மாவட்ட செயலாளா் பதவிக்கு அசோக்குமாா் எம்.எல்.ஏ. சாா்பில், அவைத் தலைவா் காத்தவராயன் உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா்.
மேலும் மாவட்டச் இணை செயலாளா் பதவிக்கு ஊத்தங்கரை முன்னாள் எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட பொது குழு உறுப்பினா் பதவிக்கு சதீஷ் ஆகியோா் வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.
அப்போது, மாவட்ட பொருளாளா் சீனிவாசன், நகர செயலாளா் கேசவன், ஒன்றிய செயலாளா், சோக்காடி ராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளா் வேலன், காவேரிப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

